தூத்துக்குடி மாவட்டம் பாளையங்கோட்டை பதிவு மாவட்டம். நாசரேத்தில் 1கோடி ரூபாய் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டிருந்த சார்பதிவாளர் புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலுள்ள தலைமை செயலகத்தி லிருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மரு. கி. செந்தில் ராஜ் இ. ஆ. ப குத்துவிளக்கு ஏற்றி துவக்கிய விழாவில் திருநெல்வேலி துணை பதிவு துறை தலைவர் கவிதா ராணி, பாளையங்கோட்டை நிர்வாக மாவட்ட பதிவாளர் சண்முக சுந்தரி, தணிக்கை மாவட்ட பதிவாளர் பாபு அருள் ஜோஷி, சேரன்மகாதேவி நிர்வாக மாவட்ட பதிவாளர் பாக்கியம், சார் பதிவாளர் சரவணன், இராமசந்திரன், மேபல் தயா நவகுமாரி, நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி, முன்னாள் தலைவர் ரவி செல்வகுமார், செயல் அலுவலர் பால்ராஜ், வெள்ள மடம் ஊராட்சி தலைவர் ஜாஸ்மின், மூக்குப்பேரி ஊராட்சி தலைவர் கமலா,மார்க்காசியஸ் கல்லூரி முதல்வர் முனைவர். அருள்ராஜ் பொன்னு துரை, காவல் ஆய்வாளர் பட்டாணி, வியாபாரிகள் சங்க தலைவர் டெடிலரிட் கண்ணப்பா, கட்டிடம் கட்ட நிலம் தானமளித்த ரானயா பதிவு அலுவலக உதவியாளர் சக்திவேல், உதவியாளர் சேகர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment