மக்களை பற்றி சிந்தித்து ,உழைத்து, முன்னேற்றும் ஆட்சியால் மக்கள் பயன்படுவது கண்டு மகிழ்ச்சியே; கனிமொழி பேச்சு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 16 April 2022

மக்களை பற்றி சிந்தித்து ,உழைத்து, முன்னேற்றும் ஆட்சியால் மக்கள் பயன்படுவது கண்டு மகிழ்ச்சியே; கனிமொழி பேச்சு.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அணியாபரநல்லூர் ஊராட்சியில் மறு சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்படு திட்டம் சார்பில் மீனாட்சி பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உணவு அருந்தும் கூடத்தை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். 

அப்போது அவர் பேசுகையில் "ஏழை எளியோர் வீட்டு பிள்ளைகளின் கல்வி ஊக்குவிப்பிற்கு என்றும் துணை நிற்கும் ஆட்சி திராவிட முன்னேற்ற கழக ஆட்சியாகும். முதல் தலைமுறை கல்வி கற்கும் பெண்களுக்கு மாதம் 1000ரூபாயாக வழங்கும் திட்டத்தை கொண்ட ஆட்சி நமது முதல்வரின் ஆட்சியாகும்.


தமிழகத்தில் நீதி கட்சி அதை தொடர்ந்து காமராசர் அவருக்கு பின்வந்த திமுக கழக ஆட்சியில் தொடர்ந்து பின்னவந்த மற்ற கட்சிகளும் மதிய உணவு திட்டத்தை விரிவடைய செய்துள்ளனர்.அதிலும் குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மதிய  உணவில் முட்டை தரும் திட்டமாகமாற்றி சத்துணவை சத்து நிறைந்த உணவாக தந்தந்தார். எனவே மக்களை பற்றி சிந்தித்து மக்களுக்காக மட்டுமே உழைத்து மக்களை முன்னேற்றும் நமது ஆட்சியில் நலத்திட்டங்களால் மக்கள் பயன்படுவது கண்டு மகிழ்ச்சியே" என்றார்.

விழாவில் பேசிய அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் "நமது முதல்வரின் கனவு எளிய மக்களும் சாதாரண மக்களும் முன்னேறவேண்டும் என்பது. அதனால் தான் இடஒதுக்கீட்டில் 7.5%ம் வழங்கி கிராமப்புற எளிய மக்களின் பிள்ளைகளும் நன்கு படித்து மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புக்களை பெற்று முன்னேறவேண்டும் என்று பல நல திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் நமது பாராளுமன்ற உறுப்பினரும்,சட்டமன்ற உறுப்பினரும் தங்களால் இயன்ற அளவு பல நல்லதிட்ட ங்களை மக்களுக்கு கிடைக்க செய்து வருகின்றனர்" என்றார். 


விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகய்யா பேசும் போது "மறைந்த முதல்வர் கருணாநிதியால் மகளிர் சுயஉதவி குழு அறிமுகம் செய்யப்பட்டு மகளிருக்கு தன்னம்பிக்கை தரும் வகையில் பல நலத்திட்டங்களை கொடுத்தது, அவர் வழியில் நமது முதல்வரும் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சரும் பெண்கள் கல்வி, மேம்பாட்டிற்கும் வேலை வாய்ப்பிற்கும் உதவும் வகையில் பல நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். அதில் ஒன்றாக இந்த பள்ளி கூடமும் சத்துணவு கூடமும் அமைக்க பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுக பெருமாள், மாநகர கவுன்சிலர் சுயம்பு,ஒன்றிய கழக செயலாளர்கள் கொம்பையா, ஜெயகோடி, சுப்பிரமணியம், பஞ்சாயத்து தலைவர் சித்திரை பாண்டி, துணை தலைவர் பெரிய துரை, ஊர்தலைவர் ராஜகோபால், மீனாட்சி பட்டி  கிளை கழக செயலாளர் வேலம்மாள், நாராயணசாமி, அணியாபரணி கிளை கழக செயலாளர் பொன்ராஜ், மூலக்கரை பஞ்சாயத்து தலைவர் பேச்சி முத்து, பேரூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராஜ்,வட்டார  வளர்ச்சி அலுவலர் சுரேஷ், அன்றோ,வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கொட்டிவாக்கம் பள்ளி செயலாளர் டி. ராஜ்குமார்,பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகா ஞான லதா மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவியர், ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad