மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை சார்பில் 28ம் ஆண்டு அரசு அதிகாரிகளுக்கு சேவை விருது வழங்கும் விழா . - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 18 April 2022

மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை சார்பில் 28ம் ஆண்டு அரசு அதிகாரிகளுக்கு சேவை விருது வழங்கும் விழா .

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள டுவிங்க்ள் மஹாலில் நடைபெற்றது, விழாவில் அரசு அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவர்களின் பணிகளை பாராட்டியும் அவர்களினால் மக்கள் அடையும் பலன் களைப் பற்றி கூறியும் இந்த விருது வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக dcw சாகுபுரம்.மூத்த தலைவர் .ஜி சீனிவாசன்  கலந்து கொண்டு விருது வழங்கி பேசுகையில் "26 ஆண்டுகளை கடந்து வந்திருக்கும் இந்த பேரவையின் தேவை இன்றைய காலத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நடுத்தர எளிய மக்கள் அரசு துறைகளில் சரியான தீர்வை பெறுவதற்கு இந்த அமைப்பு தொடர்ந்து இயங்கி வருவது சமூக தேவைகளில் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய அமைப்பாக இந்த அமைப்பு விளங்குவது குறிப்பிட்டதக்கது. பொதுவெளியில் மக்களின் இன்னல் தீர்க்க இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள் என்றார்.

விழாவில் பேசிய மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவையின்  நிர்வாக செயலர் கல்லை சிந்தா "பொதுவாக எந்த ஒரு அமைப்பும் நகரங்களில் தோன்றி கிராமப்புறங்களுக்கு வரும் ஆனால் இந்த அமைப்பு கிராமத்தில் தோன்றி நகரங்களை சென்றடைந்த அமைப்பு.இதன் முக்கிய நோக்கம் பொதுமக்களும் பெண்களும் நுகர்வோர் சட்டங்கள், அரசாங்கத்தின் பிற சட்டங்கள், காவல் துறை சட்டங்கள் இவற்றைதெரிந்து கொள்ள செய்வதாகும். அதனால் தான் இந்த அமைப்பு மூலம் விழிப்புணர்வு தரும் வகையில் பல கூட்டங்கள் நடத்த படுகிறது. இது போன்ற செயல்களால் மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளையும் அரசின் சட்ட பாதுகாப்பு வழி வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ள முடியும்" என்றார், மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவையின் தலைவர் வே.செல்வன் "கடந்த கொரோனா காலகட்டத்தில் சாகுபுரம் டி. சி.டபுள்யு பொதுமக்களுக்கு செய்த உதவிகள் பற்றி எடுத்து கூறினார்.

விழாவில் நெல் கொள்முதல் வரைமுறை,மக்கள் தரும் மனுக்கள் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஒத்துழைப்பு தந்து சிறந்த தீர்வை தரவேண்டும்,ஸ்ரீவைகுண்டம் அணைகட்டின் கீழுல்லுள்ள தூர்வாரதா குளங்கள் தூர்வாரவும், நாசரேத் பகுதியில் பொறியியில் பட்டதாரி இளைஞர்கள் படித்து இருக்கும் நிலையில் புதிய வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்கவும், ஆக 11 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்ற பட்டது. ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் எஸ் .ஜனகர் நாசரேத் பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ. ரவி செல்வகுமார், நாசரேத் தொழிலதிபர் இ. கிருஷ்ணராஜ், ஓய்வு பெற்ற பேராசிரியர் எம். காசிராஜன், ஆத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் கமாலுதீன் ,தெற்கு ஆத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சதீஷ்குமார், கச்சனாவிளை பேரூராட்சி மன்றத் தலைவர் கிங்ஸ்டன்  ஆகியோர் வாழ்த்துரை தெரிவித்தனர்.


நிகழ்ச்சியில் தென்திருப்பேரை பேரூராட்சித் தலைவர் மணிமேகலை ஆனந்த், நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி, துணைத்தலைவர் அருண் சாமுவேல், அங்கமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் ராமஜெயம், குரும்பூர் நவீன் குமார்,  ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மாநில பேரவை பொதுச் செயலாளர் எம் கொம்பையா, அமைப்புச் செயலாளர் எஸ் .தியாகராஜன், பேரவைச் செயலாளர்  கப்பர் அசன், மகளிர் அணி செயலாளர் முகமது மாஜிதா,பேரவை துணை பொதுசெயலாளர் ஜெபகுமார், மாநில  பேரவை துணைச் செயலாளர்கள் ,தென் மண்டல தலைவர் ஞானமூர்த்தீஸ்வரர் தூத்துக்குடி மாவட்ட செயலர் கலீல் ரகுமான் மகளிரணி செயலர் மேரி கீதா மாவட்டத் தலைவர் கரையாளன் மாநகரத் தலைவர் விநாயகம் மற்றும் திருநெல்வேலி மதுரை கன்னியாகுமரி செயலர்களும் ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி சாத்தான்குளம் ஏரல் நாசரேத் ஆறுமுகநேரி சாயர்புரம் ஆத்தூர் திருச்செந்தூர் காயல்பட்டினம் தென்திருப்பேரை பகுதிகளைச் சேர்ந்த தலைவர் செயலாளர் பொருளாளர் என பலரும் கலந்து கொண்டனர். 


நிகழ்ச்சியின் நிறைவாக பேரவை மாவட்ட அமைப்பாளர் எம் லட்சுமணன் நன்றியுரை கூறினார் நிகழ்ச்சியின் நிறைவாக ஏழை எளிய பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad