நாசரேத் அருகிலுள்ள கடையனோடையில் ஒய்.எம்.சி.ஏ. மற்றும் நண்பர்கள் விளையாட்டு குழு சார்பில் கிரிக்கெட் போட்டி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 19 April 2022

நாசரேத் அருகிலுள்ள கடையனோடையில் ஒய்.எம்.சி.ஏ. மற்றும் நண்பர்கள் விளையாட்டு குழு சார்பில் கிரிக்கெட் போட்டி

நாசரேத் அருகிலுள்ள கடையனோடையில் ஒய்.எம்.சி.ஏ. மற்றும் நண்பர்கள் விளையாட்டு குழு சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நாசரேத், தென்திருப்பேரை, பிரகாசபுரம், மூக்குப்பேறி, பாட்டக்கரை, தேறியூர், திருவைகுண்டம், பண்டாரவிளை ஆகிய ஊர்களில் இருந்து 20 கிரிக்கெட் அணியினர் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற தலா 4 அணிகளுக்கும்  பரிசு தொகை மற்றும்கோப்பைகளை கடையனோடை பரி.தோமாவின் ஆலய போதகர் ஆசீர் சாமுவேல், ஓய்வு பெற்ற ஆசிரியர் பால்தாசன், அரசு ஒப்பந்தகாரர் சைமன், ஓய்வு பெற்ற துறைமுக ஊழியர் பாலகிருஷ்ணன், அரசு கேபிள் டிவி ஆபரேட்டர் ஜெகன், தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த வினோலின், முத்துபாண்டி, ரீகன், தொழில் அதிபர்கள் ரூபன், பைசோன், எலைட் சரிட்டி டிரஸ்ட் டேவிட்,  ஊர் பெரியவர் இசக்கி ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர். 


பரிசு தொகை மற்றும் கோப்பைக்கான நன்கொடைகளை சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் தாமஸ், நண்பர்கள் பிரான்சிஸ், ஜோயல், சேபா, ஆனந்த் மற்றும் ஓய்வு பெற்ற மருத்துவ உதவியாளர் ஜேக்கப், கோவை தொழில் அதிபர் தாமஸ் ஆகியோர் வழங்கியிருந்தனர். தமிழ்நாடு பிரீமியர் லீக் வீரர்கள் அதிசயராஜ் டேவிட்சன் மற்றும் ஜெபா ஆகியோர் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை கடையனோடை ஓய்.எம்.சி.ஏ வை சேர்ந்த விளையாட்டு குழுவினர் செய்திருந்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad