சிவந்தி ஆதித்தனாரின் 9வது வருட நினைவு தினத்தில் தூத்துக்குடி மேயர் ஆதித்தனாரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 19 April 2022

சிவந்தி ஆதித்தனாரின் 9வது வருட நினைவு தினத்தில் தூத்துக்குடி மேயர் ஆதித்தனாரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி மார்க்கெட் காமராஜர் சிலை அருகிலுள்ள சி .பா .சிவந்தி ஆதித்தனாரின் 9 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.


ஆதித்தனார் தினத்தந்தி மற்றும் மாலைமலர் நாளிதழ்களின்    உரிமையாளராகவும், பல கல்வி நிறுவனங்களின் அதிபராகவும், இந்திய கைப்பந்து சம்மேளனத் தலைவராகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பதவிவகித்தவர். இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறப்பாக சேவையாற்றியதற்காக 2008 ஆம் ஆண்டு
பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.


தூத்துக்குடி தெஷணமாற நாடார் சங்கம் சார்பில் வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தன் திருஉருவ படத்திற்கு தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில் திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், வணிகர் சங்க தலைவர் பா.விநாயகமூர்த்தி, காங்கிரஸ் மத்திய மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் வழக்கறிஞர் டேவிட் பிரபாகரன், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் அற்புத ராஜ் , நகர செயலாளர் உதய சூரியன், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் செங்குட்டுவன், பி.ஜே.பி. சிறுபான்மை பிரிவு வழக்கறிஞர் வாரியார், மற்றும் மிக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad