அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமை தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் சங்கத்தமிழன் தலைமை தாங்கினார் .மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், திருச்செந்தூர் தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், ஒன்றிய பொருளாளர் ராசேந்திரன் வளவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை செயலாளர் புஞ்சை அரசன் விழாவை துவக்கி வைத்தார் திருச்செந்தூர் கல்வி மாவட்ட அலுவலர் மோகன் மண்டல செயலாளர் தமிழினியன் அமைச்சரின் நேர்முக உதவியாளர் கிருபாகரன் அரசு வக்கீல் ஆகியோர் வாழ்த்தி பேசினர் சிறப்பு அழைப்பாளராக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா. ஆர். ராதாகிருஷ்ணனின் மகன் ஆனந்த மகேஸ்வரன், கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சீருடையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத் தலைவர் ஏ. பி. ரமேஷ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுதாகர், ஒன்றிய செயலாளர் நவீன் குமார், திருச்செந்தூர் கவுன்சிலர் செந்தில்குமார், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கவுன்சிலர் சரவணன் நன்றி உரையாற்றினார்
No comments:
Post a Comment