தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் இயங்கி வந்த நியாய விலை கடைக்கான புதிய கட்டிட திறப்பு விழா புதுக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் ஐ.ஜாக்சன் துரை மணி தலைமையில் திறக்கபட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட துணை தலைவர் முப்பிலியான் மற்றும் வார்டு உறுப்பினர் அனைவரும் தலைவரின் முயற்சியை பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். தலைவர் ஜாக்சன் துரை மணி அனைவரையும் வரவேற்று பேசியதுடன் கட்டிடம் கட்ட தனக்கு பலவிதத்தில் ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
நிகழ்வில் ஏ.இ.ஓ. ஜெயபாலன், வேலம்மாள், அதிசயராஜ், விஜயகுமார், நாராயணன் மற்றும் பேராலய உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்க பட்டது.


No comments:
Post a Comment