தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள உலக புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் திருக்கோயிலில் சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் கொண்டு வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றதுடன் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது, தமிழ் நாட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான நாதஸ்வரம், கரகாட்டம், வில்லிசை, நையாண்டி மேளம், கணியான் கூத்து நடனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு தமிழ் புத்தாண்டினை சிறப்பாக கொண்டாடினர்.

No comments:
Post a Comment