தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இன்று ’சமத்துவநாள்’ உறுதி மொழி ஏற்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 14 April 2022

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இன்று ’சமத்துவநாள்’ உறுதி மொழி ஏற்பு.

அண்ணல் அம்பேத்காருடைய பிறந்தநாளான ஏப்ரல் 14ம் நாள் சமத்துவ நாளாக கொண்டாடுமாறு தமிழக முதல்வர் அறிவித்தலின்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி. டாக்டர். எல். பாலாஜி சரவணன் வழிகாட்டுதலின் பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை ஏ.எஸ்.பி இளங்கோவன் தலைமையில் காவல்  அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு ‘சமத்துவ நாள்” உறுதி மொழி கீழ்கண்டவாறு எடுக்கப்பட்டது.


சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்.” என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.


இதில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, ஆயுதப்படை உதவி ஆய்வாளர் கணேச மணிகண்டன், அலுவலக கண்காணிப்பாளர் மயில்குமார், உட்பட உதவியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad