உமரிக்காடு ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் சிறப்பு கிராம சபை கூட்டம் முத்தாரம்மன் கலையரங்கத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவருமான எஸ் .ராஜேஷ் குமார் தலைமை தாங்கினார் .சாலை ஆய்வாளர் வசந்தா முன்னிலை வகித்தார்.
ஊராட்சி செயலர் வாசுதேவன் கிராமசபை கூட்டத்தில் தீர்மான பொருள்கள் குறித்து விவாதித்தார்.ஊராட்சி தலைவர் ராஜேஷ் குமார் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து விளக்கமளித்தார்.
குறிப்பிட்ட நபர்கள் குறைகளை மனுவாக அளித்தனர்.கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாஸ்கர் மற்றும் செவிலியர் இசக்கி தங்கம்,வார்டு உறுப்பினர்கள் மணிகண்டன், கோதைநாயகி,முருகேஸ்வரி, பேச்சியம்மாள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment