தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் நம்மாழ்வாரால் பாடல்பெற்று மங்காளாசாசனம் செய்யப்பட்ட திருத்தலங்கள் நவதிருப்பதி எனும் திருநாமத்துடன் அழைக்கப்படுகின்றன. அவைகளில் முதலாவதாக சூரிய அம்சமாக விளங்குவது ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் திருக்கோயில் ஆகும்.இங்குள்ள மூலவர் ஸ்ரீ வைகுண்ட நாதன், தாயார் ஸ்ரீ வைகுந்தவல்லி பூதேவி தாயார்.
முன்னொரு காலம் காலதூஷகன் என்னும் திருடன் ஒருவன் இப்பெருமாளை வழிபட்டு பின் திருட போவது வழக்கம்.அவ்வாறு திருடிவிட்டு வந்த பின் தான் திருடிய செல்வத்தில் பாதியை இப்பெருமாளுக்கு காணிக்கையாக தந்துவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான்.
ஒரு சமயம் இவனும் இவனது கூட்டாளிகளும் அரண்மனையில் திருட போனபோது கையும் களவுமாக மாட்டிக்கொண்டனர். ஸ்ரீவைகுண்டம் பெருமானை மனதில் வேண்டி காலதூஷகன் சரணடைய, பெருமாளும் மாறு வேடத்தில் தானே திருடனை போல உருவெடுத்து அரண்மனைக்கு சென்று அரசனுக்கு தன் சுயரூபத்தைக் காட்டி அருள் புரிய அடி பணிந்து நின்ற அரசனும் மகிழ்ந்து கள்ளபிரான் என்று பெருமாளை கைகூப்பி தொழுததுடன் காலதூஷனையும் அவனது கூட்டாளிகளையும் விடுவித்தான்.பெருமாளின் கருணையால் விடுதலை பெற்ற அவர்களனைவரும் மனம் திருந்தி பெருமாளை சரணடைந்தனர் என தல வரலாறு கூறுகிறது.
இக்கோயிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும்.அதன்படி கடந்த 20ஆம் தேதி தொடங்கி பத்து நாட்கள் நடைபெற்றுவரும் விழாவில் தினமும் சிம்ம வாகனம் ,அனுமந்த வாகனம், சேஷ வாகனம்என பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வருவதும்,பக்தர்களுக்கு காட்சி தருவதும் நடைபெறும்.அதில் 5-ம் திருநாளில் காலையில் ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான் ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பெருமான், திருப்புளியங்குடி காய்சினவேந்தன் பெருமாள், நத்தம் எம் இடர் கடிவான், ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.
பின்னர் அனைத்து பெருமாள்களும் தாமிரபரணி நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. அதை தொடர்ந்துஇன்று அதிகாலை குடைவரையில் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி உள்ள சுவாமி நம்மாழ்வார் எதிர் சேவையாக பெரிய திருவடி கருடாழ்வார் வாகனத்தின் மீதுகள்ளர்பிரான் இருக்க ஆழ்வார்திருநகரி பொழிந்து நின்ற பெருமான் ,திருப்புளியங்குடி காய்சிணிவேந்த பெருமாள், நத்தம் ஸ்ரீ எம்மிடர் கடிவான் ஆகியோர் காட்சி அளித்தனர். நான்கு கருடவாகனம் மற்றும் அன்ன வாகனத்தில் திருவீதி புறப்படு சேவை நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் நவ திருப்பதி பெருமாளின் கருட சேவையை ஒரே இடத்தில் கண்டு மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment