தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை திருநெல்வேலி மண்டலமும் தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றமும் இணைந்து உலக ஓவிய தினத்தை முன்னிட்டு வழங்கிய ஓவிய பயிற்சி முகாம் தூத்துக்குடி மாவட்ட அரசு இசை பள்ளியில் நடைபெற்றது.
ஓய்வு பெற்ற ஆசிரியை ஜெயலட்சுமி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியின் நிறைவாக மாணவ மாணவிகள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கினாா்.
அப்போது அவர் பேசுகையில் நாம்தான் நமது முன்னேற்றத்திற்கான வழிகளை கண்டறிந்து செயல்பட வேண்டும்.வாழ்வில் முன்னேற ஏழ்மை என்பது தடையல்ல.மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தனது ஏழ்மையான குடும்ப சூழலிலும் வாழ்நாளில் நன்கு படித்து அயராது உழைத்து முன்னேறிய உன்னத மனிதர்.அவரின் வாழ்க்கை வரலாற்றை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்து வளர்ந்தால் வாழ்வில் நீங்களும் மிகப்பெரும் நிலை அடையமுடியும் என குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இசை பள்ளியின் தலைமை ஆசிரியை மு. சிவகாம செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினரா க கலந்து கொண்ட ஆசிரியை ஜெயலட்சுமியையும்,பயிற்சி அளித்த லசால் பள்ளியின் ஓவிய ஆசிரியர் இஸிதோர் பர்ணாந்துவையும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
பயிற்சி முகாமில் 300 மாணவ மாணவிகள் பல்வேறு விதங்களில் ஓவியம் வரைவதற்கும், வண்ணம் தீட்டவும் பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக ஓவிய ஆசிரியை நித்யா நன்றி உரை வழங்கினார். நிகழ்ச்சியில் வயலின் ஆசிரியர் ஈஸ்வரன், தேவாரம் ஆசிரியர் சுப்பிரமணியன் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment