ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் வட்டார அரசு தலைமை பொது நூலக வாசகர் வட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கம் சார்பில் உலக புத்தக தின விழா நூலகத்தில்நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு நூலகத்தில் உள்ள புத்தகங்களை வரிசைப்படுத்தி குறியீடுகள் இட்டு ஒழுங்கு படுத்தினர். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திருச்செந்தூர் கோவில் காவல் ஆய்வாளர். சுமதி கலந்துகொண்டு புத்தக தின விழா போட்டியில் பரிசு பெற்ற மாணவியர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்க தலைவர் கோ. சந்திரசேகர், திருமா பயிலகத்தின் பொறுப்பாளர்கள் விடுதலைச் செழியன், ரகுவரன், கல்லூரிப் பேராசிரியர்கள் சாந்தா,ஜான்சிராணி ஆகியோர் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நல் நூலகரும் நூலக செம்மலுமான மாதவன் சிறப்பாக செய்திருந்தார்.
No comments:
Post a Comment