ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு ஏரல் கிளை நூலகத்தில் ஏரல் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியப் போட்டிகள் வாசகர் வட்டத்தின் சார்பாக நடத்தப்பட்டது. நிகழ்வில் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த நல்லாசிரியர் வின்சன் வெள்ளையா, சொக்கலிங்கம் ஆகியோர் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தனர். ஓய்வுபெற்ற புள்ளியல் இணை இயக்குனர் முருகேசன், சிறை துறையைச் சார்ந்த நந்தகுமார், வாசகர் சுப்பிரமணியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பறவைகள் மற்றும் இயற்கை காட்சிகள் குறித்த நடைபெற்ற ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் மற்றும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
நூலகர் நன்றி கூறினார்
No comments:
Post a Comment