உலக புத்தக தின விழா கொண்டாடட்டம் ஏப் 23 அன்று
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் பா. ரெங்கநாயகி தலைமையில் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நூலகத்தின் முதல் நிலை நூலகர் மா. ராம் சங்கர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் மேயருக்கு மாவட்ட நூலக அலுவலர் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கெளரவித்தார்.
மைய நூலகத்தில்
உலக புத்தக தினத்தை முன்னிட்டு
அமைக்க பட்டுள்ள புத்தக கண்காட்சியை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்ததுடன்
உலக புத்தக தின
சிறப்பை பற்றியும் புத்தக வாசிப்பினால் கிடைக்கின்ற பலன்கள் பற்றியும் நிகழ்வில் எடுத்து கூறினார். மேலும் விழாவில் "ஆதலினால் நூலகம் செல்வீர் "என்ற தலைப்பில் நூலகத்தின் பயன்பாடு பற்றியும் நூலகத்தின் தேவைகள் பற்றி எடுத்து சொல்லும் விதமாக பேச்சுபோட்டி
பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர். நெய்தல். யூ. அண்டோ பேசும் போது புத்தக அச்சு பதிப்பில் தூத்துக்குடியும் அதன் அருகிலுள்ள புன்னக்காயல் ஊரும் எத்தனை முக்கியமானவை என்னும் விதத்தில் பேசினார்.தூத்துக்குடி அரிமா சங்கத்தின் தலைவர் சுரேஷ் தங்கராயப்பன், கட்டிட வல்லுநர் சு. முஹம்மது ஹயாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலகர் ஜெ. லதா நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. விழாவில் நூலகர் விஜயா, அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment