தூத்துக்குடி மாவட்டம் விளா த்திகுளம் தாலுகா குளத்தூரி
லுள்ள டி.எம்.எம்
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனித உரிமை கழகத்தின் சார்பில் உந்துதல் பண்புகள் என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது .தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமான இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் இரண்டாம் ஆண்டு மாணவன் மணிகண்டன் வரவேற்று பேசினார்.கல்லூரி இயக்குனர் முனைவர் கோபால் இவ்விழாவிற்கு தலைமையுரை வழங்கினார்.
Mr .R.M.அமர்நாத் விழாவினை தொடங்கி வைத்தார்.கல்லூரி முதல்வர் முனைவர் அன்பழகன் விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினார்.பின்னர் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.அதனைத் தொடர்ந்து சாத்வி ஜோதீஸ்வரரூபினி ஜி சிறப்புரையில் யோகா பற்றியும் மாணவர்களின் மனதை ஒருநிலை படுத்தும் வழிகளையும் எடுத்துரைத்தார்.
.விழாவினை முதலாம் ஆண்டு மாணவி அஸ்வினி தொகுத்து வழங்கினார்.மனித உரிமை கழக ஒருங்கிணைப்பாளர் ஆங்கிலத்துறை தலைவி சுகிர்தமலர் கல்லூரி முதல்வர்
வழிகாட்டுதலின்படி,
ஆங்கிலத் துறை பேராசிரியர்களின் உதவியோடு சிறப்பாகச் செய்திருந்தார்கள்.இரண்டாம் ஆண்டு ஆங்கில மாணவர் மாரிச்செல்வம் நன்றியுரை வழங்கிட நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவடைந்தது.
No comments:
Post a Comment