சாத்தான்குளத்தில் புதிய டி.எஸ்.பி அலுவலகத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 12 April 2022

சாத்தான்குளத்தில் புதிய டி.எஸ்.பி அலுவலகத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.

சாத்தான்குளத்தில் 1.2 கோடியில் வீட்டு வசதி வாரியம் மூலம் புதிதாக கட்டப்பட்ட டி.எஸ். பி அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி யில் மாவட்ட எஸ். பி. டாக்டர்.எல். பாலாஜி சரவணன் குத்து விளக்கு ஏற்றி வைத்தார். 
அவருடன் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய இணை பொறியாளர் உஷா ராணி, சாத்தான்குளம் டி.எஸ். பி. ராஜு, காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி, உதவி ஆய்வாளர்கள் எப்பணேசர், விஜய குமார், ரத்னராஜ், பால்மணி, ரயிஸ்டன் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad