தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்க பதக்கங்களை வென்ற சிலம்பு வீர,வீராங்கனைகள் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியிடம் பாராட்டு பெற்றனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 11 April 2022

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்க பதக்கங்களை வென்ற சிலம்பு வீர,வீராங்கனைகள் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியிடம் பாராட்டு பெற்றனர்.

கடந்த மார்ச் 26 முதல் 28 வரை 3 நாட்கள் டெல்லியில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். 


இந்த போட்டியில் தூத்துக்குடி முத்து சிலம்பு கூடத்தை  சேர்ந்த  மாணவர் தினேஷ் குமார்  20 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் வெற்றி பெற்று தங்கபதக்கமும்,  மாணவி வெரோனிகா பாத்திமா என்பவர் 14 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெற்று தங்கபதக்கமும் சான்றிதழும் பெற்றனர். சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு தங்கபதக்கங்களை வென்ற இவ்விருவரும்  மாவட்ட எஸ்.பி. டாக்டர் எல். பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்தும் பாராட்டும் பெற்றனர். 


இந்நிகழ்வின் போது தூத்துக்குடி முத்து சிலம்பு கூட பயிற்சியாளர் முனியசாமி, APJ சிலம்பு பள்ளி பயிற்சியாளர் அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad