தூத்துக்குடி மாநகராட்சியின் அவசர கூட்டம் ஆணையர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் துணைமேயர் ஜெனிட்டா செல்வராஜ் உட்பட அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி சீராய்வு குறித்து அதன் அவசியம் குறித்து பேசினார். தற்போது மாநகரங்களில் நிர்வாக செலவினம் பொருளாதார குறியீடு உயர்ந்துள்ளதுக்கேற்ப மாநகராட்சிகளில் நிதி தேவைகள் அதிகரித்துள்ளது.
பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் 15வது மத்திய நிதிக்குழுவின் மானியம் மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதி பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வரி சீரமைப்பு செய்ய வேண்டியதுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளை நான்கு மண்டலங்களாக தரம்பிரித்து வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்து வரி உயர்வு பொது மக்களை பாதிக்காத வண்ணம் இருக்கும் என்றார்.
இத்தீர்மானம் திமுக உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளிலுள்ள தேவைகளை மேயர் ஜெகன் பெரியசாமி இடம் எடுத்துக் கூறினார். இதற்குமேயர் பதிலளிக்கையில் முன்னுரிமை அடிப்படையில் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், காந்திமதி, ராமச்சந்திரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல் ராஜ், கலைச் செல்வி, ஆகியோர் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment