39வது தமிழ்நாடு மாநில மூத்தோர் தடகள போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 13 April 2022

39வது தமிழ்நாடு மாநில மூத்தோர் தடகள போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு.

39வது தமிழ்நாடு மாநில மூத்தோர் தடகள போட்டியானது மதுரையில் வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் 07.04.2022 முதல் 09.04.2022 வரை நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்டம் சார்பாக 80 வயது பிரிவில் திரு. எபனேசர் சங்கிலி குண்டு எறிதலில் தங்கப் பதக்கமும், குண்டு எறிதலில் வெள்ளி பதக்கமும், திரு. கண்ணையா 100மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும்இ திரு. வீரபாகு 5000மீ ஒட்டப் பந்தயத்தில் வெள்ளி பதக்கமும்இ 1500மீ ஒட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கமும், 70வயது பிரிவில் திரு. பிரின்ஸ் 100 மற்றும் 200மீ ஒட்டப் பந்தயத்தில் வெள்ளி பதக்கமும்இ திரு. வெங்கடராமனுஜம் 200மீ, 400மீ, 300மீ, தடை தாண்டு ஓட்டம் ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கமும், 65 வயது பிரிவில் திரு. சுப்பிரமணியன் சங்கிலி குண்டு எரிதல் வட்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கமும் திரு. நீல்வின் 100மீ தடை தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கமும், 60 வயது பிரிவில் திரு. செண்டு அவர்கள் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கமும், திரு. சீனிவாசன் உயரம் தாண்டுதல் மற்றும்; நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கமும், டாக்டர் பாலசுப்பிரமணியன் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கமும், 55வயது பிரிவில் திரு. செல்வன் சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கமும், திரு. சூசை மாணிக்கம் 100மீ ஒட்டத்தில் வெள்ளி பதக்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கமும், திரு. கடற்கரை 400மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் 45வயது பிரிவில் திரு. பெரிட்ரிக் அவர்கள் வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 40 வயது பிரிவில் திரு. பெனடிக்ட் அவர்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கமும், 45 வயது பெண்கள் பிரிவில் திருமதி ஞானம்மாள் 800மீ ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும், 400மீ ஓட்டத்தில் வெண்கல பதக்கமும் பெற்றார்கள். ஒட்டு மொத்தமாக 10 தங்கப் பதக்கம், 10 வெள்ளி பதக்கம், 7 வெண்கலப் பதக்கம் மொத்தம் 27 பதக்கங்களை பெற்றுள்ளனர்.

நமது திருநெல்வேலி மாவட்டம் சார்பாக தேசிய போட்டிக்கு 21 மூத்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பவற்றை மகிழ்ச்சியுடன் திருநெல்வேலி மூத்தோர் தடகள சங்கம் சார்பாக புரவலர் பால சுப்பிரமணியன், தலைவர் திரு. சஞ்சய் குணசிங், செயலாளர் திரு. நீல்வின், பொருளாளர் திரு. எபனேசர் ஆகியோர் தெரிவித்தனர்.


இந்த நிகழ்ச்சியான திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு. ச. ராஜேஷ் மற்றும் தடகள பயிற்சியாளர் திரு. சத்யா ஆகியோர் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தனர், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நமது திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர், திரு. விஷ்ணு இ.ஆ.ப அவர்கள் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad