மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் இரண்டு பேர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 2 April 2022

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் இரண்டு பேர் கைது.

வல்லநாடு கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த  தம்பான் (22) மாரிமுத்து என்பவரின் மகன், முறப்பநாடு கோவில்பத்து பகுதியை சேர்ந்த  அய்யப்பன் (21) கருப்பசாமி என்பவரின் மகன் மற்றும் அடைக்காலபுரம் சுனாமி நகரை சேர்ந்த  சாரதி (20)செல்வம் என்பவரின் மகன் ஆகிய 3 பேரும் கடந்த மாதம் மார்ச் 13 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சண்முகபுரத்திலிருந்து ராணிமகாராஜபுரம் செல்லும் சாலையில் வந்துகொண்டிருந்த ஒருவரிடம் தகராறு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 


மேற்படி இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான தம்பான் மற்றும் அய்யப்பன் ஆகிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் மாவட்ட எஸ். பி யிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட எஸ். பி.டாக்டர் எல். பாலாஜி சரவணன்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.


அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப வல்லநாடு கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த  தம்பான் மற்றும் முறப்பநாடு கோவில்பத்து பகுதியை சேர்ந்த அய்யப்பன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார் 

No comments:

Post a Comment

Post Top Ad