தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது; ரூபாய் 8,300/- மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 2 April 2022

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது; ரூபாய் 8,300/- மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல்.

ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் கடத்தியவர் கைது - ரூபாய் 8,300/- மதிப்புள்ள 5 கிலோ  புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை  கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வன் மற்றும் போலீசார் ஏப்.1ம் தேதி ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்திருநகரி ஆற்றுபாலம் பகுதியில் வாகன தணிக்கை செய்தது கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ஆழ்வார்திருநகரி நாசரேத் ரோடு பகுதியை சேர்ந்த  முத்துகுமார் (45)பரமசிவன் என்வரின் மகனான இவர் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார்  முத்துகுமாரை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 8,300/- மதிப்புள்ள 5 கிலோ 100 கிராம் எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட (TN 92 A 0299 Maruthi Omni Car) காரையும் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad