காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 2 April 2022

காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கு (தாலுகா மற்றும் ஆயுதப்படை) 444 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதன் தொடர்பான எழுத்துத் தேர்வு வரும் ஜூன் மாதம் 2022ல் நடைபெறஉள்ளது.


இத்தேர்வில் கலந்துகொள்ள தகுதிகள் பின்வருமாறு:

  1. கல்வித்தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு
  2. வயதுவரம்பு : 20 வயது முதல் 30 வரை (வயது தளர்வு உண்டு)
  3. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசிநாள் : 07.04.2022

இப்பொருள் குறித்து மேலும் விபரங்களை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம், இத்தேர்வுக்குரிய இலவச பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நேரடியாக 05.04.2022 அன்று முதல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை (சனி, ஞாயிறு விடுமுறை தவிர) நடைபெற உள்ளது.


எனவே மேற்குறிப்பிட்ட போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள வேலைநாடுநர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தமைக்கான நகலுடன் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு இலவச பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad