தூத்துக்குடி மாநகராட்சியின் 2022ஆம்ஆண்டின் முதல் மாமன்ற கூட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 9 April 2022

தூத்துக்குடி மாநகராட்சியின் 2022ஆம்ஆண்டின் முதல் மாமன்ற கூட்டம்.

தூத்துக்குடி மாநகராட்சியின் 2022ஆம் ஆண்டின் முதல் மாமன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர், கூட்டத்தில்  புதிய கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள தேவைகளை தெரிவித்தனர்.


அப்போது ஸ்டெர்லைட் ஆலை மாநகராட்சி எல்லைக்குள் இருக்க கூடாது என தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும் என அதிமுக உறுப்பினர் வீரபாகு கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த மேயர் தமிழக அரசின் முடிவுதான் எங்களது முடிவு. தீர்மானம் தேவையில்லை  என கூறினார்.


நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்கள் அனைத்தும் மேயரின் உதவியாளர் ரமேஷ் முழுமையாக வாசித்த பின்னர் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டது.

அதில் தூத்துக்குடி வ.உ.சி.துறைமுக நிர்வாகம் செலுத்த வேண்டிய ரூ.15கோடி சொத்து வரி பாக்கியை வசூல் செய்வது குறித்து  சிறப்பு தீர்மானத்தை மேயர் கொண்டு வந்தார். மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோரங்களில் மணல் சேர்வதை தடுக்க ரூ.3கோடி மதிப்பில் மாசு நீக்கும் வாகனம் வாங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பா ட்டுத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர்களின் வழிகாட்டுதலோடு இந்த முதல் கூட்டம் நடைபெறுகிறது என்று ஆரம்பித்தார். மேலும் அவர் பேசுகையில் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 1,2, 3 ஆகிய வார்டுகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, வ உ சி சந்தையில் உள்ள கடைகளுக்கு மாத வாடகை நிர்ணயம், தூத்துக்குடி போல்டன் புறத்தில் புதிய தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட  18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 


கூட்டத்தில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், காந்திமதி, ராமச்சந்திரன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி மற்றும் கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad