தூத்துக்குடி FCI குடோன் எதிரில் உள்ள 51வது வார்டு இந்திரா நகர், திரு வி க நகர் பகுதி தி மு க சார்பில் அமைக்க பட்டுள்ள நீர், மோர் பந்தலை தூத்துக்குடி மேயர் என்.ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.அவருடன் சமூக நலம் மற்றும் மகளிர் நல துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மண்டல தலைவர் பாலகுருசாமி ஆகியோர் உடன் கலந்து கொண்டனர். திறப்பு விழாவுக்கு வருகை புரிந்த அமைச்சர், மேயர், துணை மேயர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் 51வது வார்டு வட்டச் செயலாளர் R. செல்வராஜ், SM bulliders செந்தில் குமார், M. மூர்த்தி, தி மு க மகளிரணி S. சத்தியா ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேயர் ரிப்பன் கத்தரித்து நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார், மேலும் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பதநீர் அருந்தினர், உடன் வந்திருந்த முக்கிய பிரமுகர்களுக்கும் பதநீர் வழங்கப்பட்டது.பொதுமக்களில் பலரும் ஆர்வமுடன் வந்து நீர் மோர், பதநீர், தர்பூசணி ஆகியவற்றை வாங்கி பருகி மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியில் இந்திரா நகர், திரு.வி.க நகர் பகுதி தி. மு. க. முக்கியபிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment