ஏரல் பகுதியில் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 27 February 2022

ஏரல் பகுதியில் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  உத்தரவுபடி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன்  மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜாமணி மற்றும் போலீசார் இன்று (27.02.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உமரிக்காடு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த உமரிக்காடு மெயின்ரோடு முத்துலிங்கம் மகன் ராம்குமார் (28) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் தகராறு செய்து, அவதூறாகப் பேசி கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் ராம்குமாரை கைது செய்தனர்.


இதுகுறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி ராம்குமார் மீது ஏரல் மற்றும் சாயர்புரம் ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு கொலை மிரட்டல் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad