சம்பள பாக்கி, கடுப்பில் வேனிற்கு தீ வைத்த கொத்தனார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 27 February 2022

சம்பள பாக்கி, கடுப்பில் வேனிற்கு தீ வைத்த கொத்தனார்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்  மகன் செல்வகுமார் (40). இவரது வீட்டில் கூட்டாம்புளி கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் சதீஷ் (20) என்பவர் கொத்தனார் வேலை செய்தாராம். வேலை முடிந்ததும் அதற்கான சம்பளத் தொகை ரூ.10ஆயிரம் பணத்தை செல்வகுமார் சதீஷ்க்கு கொடுக்கவில்லையாம்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் செல்வகுமார் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த அவரது லோடு வேனில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார். தீ மளமளவென்று எரிந்ததில் லோடு வேன் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து செல்வகுமார் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad