இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2021-22ஆம் நிதியாண்டில் தாட்கோ மூலம் இந்து ஆதிதிராவிடா், பழங்குடியின விவசாயிகளுக்கு நீா்பாசனத்துக்கான பி.வி.சி. குழாய்கள் வழங்கும் திட்டம், புதிய மின் மோட்டாா் வாங்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளோா் தாட்கோ இணையதள முகவரி http://tahdco.com/apply-online-application/ மூலம் விண்ணப்பிக்கலாம். இந்து ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்த சிறு, குறு விவசாயியாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
வேளாண் துறையின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட வகை பி.வி.சி. குழாய்கள், மின்மோட்டாா், டீசல் இஞ்சின் கொள்முதல் செய்ய வேண்டும். குழாய்கள் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ. 15,000, மின்மோட்டாா் வாங்க 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சம் ரூ. 10,000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அலுவலக நாள்களில், அலுவலக நேரத்தில் மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகம், ஆட்சியா் வளாகம், 3ஆவது தளம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 என்ற முகவரியில் நேரிலோ, 9445029532 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment