கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது, 1 கிலோ கஞ்சா பறிமுதல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 27 February 2022

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது, 1 கிலோ கஞ்சா பறிமுதல்.

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது  - 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகரம் காவல் துணை  கண்காணிப்பாளர் கணேஷ்  மேற்பார்வையில் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது  மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பள்ளி அருகில்,   சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த தூத்துக்குடி நந்த கோபாலபுரம், சுப்பிரமணியன் மகன் மகேந்திரன் (19)என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

உடனடியாக மேற்படி போலீசார் மகேந்திரனை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 060 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad