தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர் இரண்டாம் ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 6 December 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர் இரண்டாம் ஆய்வு.


தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர் இரண்டாம் ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டத்தில் 01.01.2025-னை தகுதிநாளாக கொண்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள், 2025- னை ஆய்வு செய்திட இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மு.விவேகானந்தன், மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் லிமிடெட்
(TamilNadu Urban Finance and Infrastructure Development Corporation limited) 06.12.2024 (வெள்ளிக் கிழமை) இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு இரண்டாம் முறையாக வருகை புரிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர்களுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள், 2025-ற்காக பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். 

அதனை தொடர்ந்து Super Check-ற்காக வாக்காளர் பட்டியல் பார்வையாளர்க்கு வரப்பெற்ற 65 மனுக்களை, உரிய ஆவணங்களுடன் ஒப்பிட்டு செய்து ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட 214.தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண்கள். 218, 219, 282-யும், 217.ஒட்டப்பிடாரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண்கள். 82-யும் மற்றும் 215.திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண்கள்.42, 179 ஆகிய பாகங்களிலும் கள ஆய்வு நடத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad