ஆழ்வார்திருநகரி கோவிலில் கருடசேவை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 December 2024

ஆழ்வார்திருநகரி கோவிலில் கருடசேவை.

ஆழ்வார்திருநகரி, டிச. 13. நவதருப்பதிகளில் ஒன்பதாவது திருப்பதி ஆழ்வார்திருநகரி. நேற்று இரவு 7.30 மணிக்கு கருடசேவை நடந்தது. கைசிக ஏகாதசி முன்னிட்டு காலையில் 6 மணிக்கு விஸ்வரூபம் 7 மணிக்கு திருமஞ்சனம். 8 மணிக்கு திருவாராதனம். பின்னர் சுவாமி பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ தேவி பூதேவி நீளாதேவி ஆதி நாயகி குருகூர் நாயகி சமேதராக சயனக் குறட்டில் எழுந்தருளினார்.

இடது மண்டபத்தில் நம்மாழ்வார் தொடர்ந்து கூரத்தாழ்வார். ராமானுஜர். தேசிகர். மணவாளமாமுனி மற்றும் ஆழ்வாராதிகள். எழுந்தருளினர். மதுரகவி பரம்பரையின் அண்ணாவியார் பட்சி ராஜன் சுவாமியை அரிவாணம் கொண்டு அழைத்து வந்தனர். 

சுவாமி முன்னிலையில் அண்ணாவியார் பட்சி ராஜன் கைசிக ஏகாதசி புராணம் ஆன நம்பாடுவான் கதையை படித்தார். பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நம்மாழ்வார் தனது சன்னதி வந்தவுடன் அண்ணாவியார் சுவாமியை அவரது திரு மாளிகைக்கு பிரம்ம ரதத்தில் கொண்டு விட்டு வர அருளிப்பாடு சாதிப்பார். 

உடன் கோவில் ஸ்ரீ பாதம் தாங்கிகள் அவரை பிரம்ம ரதத்தில் அவரது திரு மாளிகையில் கொண்டு விட்டனர். மாலை 6 மணிக்கு சாயரட்சை. பின்னர் பொலிந்து நின்றபிரான். மற்றும் நம்மாழ்வார் வாகன குறட்டிற்கு எழுந்தருளி இரவு 7.30 மணிக்கு பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் மழையின் காரணமாக பந்தல் மண்டபம் சுற்றி புறப்பாடு நடந்தது. 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் கண்ணன். விவேக் எம்பெருமானார் ஜீயர். அறங்காவலர் குழுத் தலைவர் ராமானுஜன் (எ) கணேசன். உறுப்பினர்கள் கிரிதரன். ராம லட்சுமி. காளிமுத்து, செந்தில். நிர்வாக அதிகாரி சதீஷ். ஆய்வாளர் நம்பி. முன்னாள் அறங்காவலர் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad