தூத்துக்குடி - எட்டயாபுரம் ரோட்டில், கோவில்பட்டி ஒய்எம்சிஏ இயக்கத்தின் சார்பில் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கோவில்பட்டி ஒய்எம்சிஏ தலைவர் ஆர்ம்ஸ்டிராங் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார். ஒய்எம்சிஏ துணை மண்டலத் துணைத் தலைவர் ரோஜர் அப்ரின் வரவேற்றார்.
தூத்துக்குடி - எட்டயாபுரம் ரோட்டில் உள்ள விவசாய நிலங்களில் வேலைபார்க்கும் விவசாய தொழிலாளர்களுக்கு, சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து ஜீ.கே.விநாயகா சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் அருண்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
ஒய்எம்சிஏ செயலர் மேத்யூ நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பிரின்ஸ் மோசஸ் செல்வன், ஜான் சவுந்திர பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment