அமலி நகர் வடக்கு பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க கோரி கடற்கரையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 December 2024

அமலி நகர் வடக்கு பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க கோரி கடற்கரையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

அமலி நகர் வடக்கு பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க கோரி கடற்கரையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் முன்னாள் அமைச்சர் எஸ் பி. சண்முகநாதனிடம் மனு அளித்தனர்.

திருச்செந்தூர் அமலி நகர் வடக்கு பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி கடந்த 25 நாட்களாக மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பழைய காயல், புன்னைகாயல், சிங்கத்துறை, கொம்புத்துறை, வீரபாண்டியன்பட்டணம், ஜீவா நகர், ஆலந்தலை, புதுவா நகர், மணப்பாடு, பெரியதாழை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மீனவ கிராம மக்கள் கடற்கரையில் கருப்புக் கொடி ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன் தலைமையில் ஆதரவு தெரிவித்து கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்க உள்ள இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அமலி நகர் ஊர் கமிட்டியினர் சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதனிடம் ஊர் தலைவர் செல்வராஜ் மற்றும் தஸ் ஆகியோர் கோரிக்கை மனுக்களையும் வழங்கினர். 

இதில் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் காசிராஜன், திருச்செந்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், நகர அதிமுக செயலாளர் மகேந்திரன், அதிமுக நிர்வாகிகள் மகாலிங்கம், டாக்டர் என் சுரேஷ், வினோத், கலைச்செல்வன், டிக்சன், மகளிர் அணியினர் சுகிர்தா, ரம்யா நாராயணன் , அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம், ஊர் கமிட்டியினர் , மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad