ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் இன்று (06.12.2024) ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறுக்குசாலை சண்முகபுரம் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது,
அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்ததில், அதில் தூத்துக்குடி குளத்தூர் பகுதியை சேர்ந்த பெத்துப்பாண்டி மகன் பொன்னுதுரை (37) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் பொன்னுதுரையை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 3,432/- மதிப்புள்ள 3 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment