சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திருச்செந்தூர் டாக்டர் அம்பேத்கர் நினைவு கல்வி அறக்கட்டளை சார்பில் 16வது ஆண்டு வீரவணக்க பேரணி மற்றும் மது ,போதை பொருட்கள் ஒழிப்பு மகளிர் மாநாடு தீர்மான விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
அம்பேத்கர் சிலை முன்பு பேரணியை வழக்கறிஞர் அகமது சாகிபு தொடங்கி வைத்தார். முன்னதாக அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .பேரணி பழைய எடிசன் மருத்துவமனை, இரும்பு ஆர்ச், திருச்செந்தூர் நகராட்சி அம்பேத்கர் நினைவு பூங்கா, பகத்சிங் பேருந்து நிலையம் வழியாக தந்தை பெரியார் திடலை சென்றடைந்தது.
தொடர்ந்து அம்பேத்கர் நினைவு இல்ல திருமா திடலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளரும், திருச்செந்தூர் டாக்டர் அம்பேத்கர் நினைவு கல்வி அறக்கட்டளை தலைவருமான முரசு தமிழப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் வில்லவன் கோதை, ஊடக மையம் மாநில செயலாளர் சஜன்பராஜ், தேர்தல் பணி பொறுப்பாளர் காயல் அகமது சாகிபு,
மாவட்டச் செயலாளர் டிலைட்டா ரவி, பொருளாளர் பாரிவள்ளல், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், தொகுதி செயலாளர்கள் திருவைகுண்டம், திருவள்ளுவன், திருச்செந்தூர் வெற்றிவேந்தன், ஒன்றிய செயலாளர் சங்க தமிழன், நகர செயலாளர் உதயா, சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ் பாரதி, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட பொறுப்பாளர் கோட்டை நந்தன் உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான் வளவன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
No comments:
Post a Comment