கிறிஸ்மஸ் விழா
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
நாடு முழுவதும் டிசம்பர் 25ம் தேதி இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்படுகிறது.எட்டயபுரத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு
பள்ளி தலைமை ஆசிரியர் லால் பகதூர் கென்னடி தலைமை வகித்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அகமது ஜலால்பைஜி,மேனாள் வருவாய் அலுவலர் பொன்.பரமானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி ஆசிரியர் ஜோசப் ராஜா ஆசீர் அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள்,பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்து முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினர்.
இதில் மாணவர்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடம் புணைந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
இதில் பள்ளி முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் லட்சுமி அம்மாள், ஆசிரியர்கள் எப்சிபாய் முத்துராஜம்,ஜானகி, ஜெயப்பிரியா, ஜான்சி ராணி,உள்பட பெற்றோர்கள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment