கட்டாரிமங்கலம் துவக்க ப்பள்ளியில் மூப்பெரும் விழாவாக, ஆண்டுவிழா கிறிஸ்துமஸ் விழா புதிய கழிப்பறை கட்டிடங்கள் அர்ப்பணிப்பு விழா என கொண்டாடப்பட்டது.
ஆரம்ப ஜெபம் உதவி குருவானவர் அற்புதராஜ் செய்தார். தலைமை ஆசிரியை விஜிலா வரவேற்புரை வழங்கினார். மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை தலைமை ஆசிரியை விஜிலா தொகுத்து வழங்கினார். தாளாளர் சேகரத் தலைவர் பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினார்கள்.
சிறப்பு விருந்தினராக கட்டாரிமங்கலம் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் யூதா காந்தி அவர்கள் பங்குபெற்று வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கான கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கப்பட்டது.
பெற்றோர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகளுக்கென பிரத்யேகமான நவீன கழிவறைகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர். மேலும் மாணவர்கள் மாணவிகளுக்கென பிரத்யேகமான உள்விளையாட்டு அரங்கம் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.
உதவிஆசிரியை கெளதமி நன்றியுரை ஆற்றினார்கள். விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை விஜிலா மற்றும் ஆசிரியைகள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்வில் அனைத்து பெற்றோரும் பங்குபெற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment