தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மேலரத வீதியில் ஆர்.லஷ்மி ஜுவல்லரி கடந்த 15ம்தேதி கோலாகலமாக திறக்கப்பட்டது. இதனை தொழிலதிபர் போத்தி பாலசுப்ரமணியன் - அமிர்தா தம்பதியினர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
முதல் விற்பனையை தொழிலதிபர் சங்கர் - சங்கரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். திறப்பு விழாவில் திருச்செந்தூர் நகர அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள் ,தொழிலதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் திறப்பு விழாவையொட்டி அன்று முதல் வரும் 20ம்தேதி வரை தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேருபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து.
அதன்படி இன்று குலுக்கல் பரிசுகள் வழங்கப்பட்டன .இதில் முதல் பரிசாக 1 கிராம் தங்க நாணயம், 2வது பரிசாக வெள்ளி காமாட்சி விளக்கு, 3வது பரிசாக 3வெள்ளி மோதிரம் வழங்கப்பட்டது. இதனை கடையின் உரிமையாளர் செந்தில் ஆறுமுகம் வழங்கினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
No comments:
Post a Comment