தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் பாலசிங் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மீரா சிராசுதின், ஆணையாளர் இப்ராகிம் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜன், ராமலட்சுமி, மெல்சி சாலினி, செந்தில், செல்வின், தாமஸ் ,தங்கலட்சுமி, ஜெய கமலா, முருகேஸ்வரி, லெபோரின், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி, உதவி பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. உறுப்பினர்கள் தங்கள் வார்டு பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை பற்றி பேசினர். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2020- 24 வரை அங்கம் வைத்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த கல்வெட்டு திறக்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment