செய்துங்கநல்லூர் பகுதியில் போலீசாரிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 17 November 2024

செய்துங்கநல்லூர் பகுதியில் போலீசாரிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு, மணக்கரை பகுதியை சேர்ந்த துரைப்பாண்டியன் மகன் பேச்சிமுத்து (எ) பாயாசம் என்பவர் மீது தூத்துக்குடி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் சாதி ரீதியான கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 14 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 2023 ஆண்டு முறப்பநாடு காவல் நிலையத்தில்

முறப்பநாடு மணக்கரை கிராமத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்தவரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்து வந்தவர் தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 24.10.2024 அன்று ஆஜராகி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரக்கூடாது என்றும் தினமும் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் காலை மாலை இரண்டு நேரமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்றும் சென்னை தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது என்ற நீதிமன்ற நிபந்தனையின் பேரில் பிணையம் பெற்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் பேச்சிமுத்து (எ) பாயாசம் நீதிமன்ற உத்தரவை மீறி கையெழுத்திடாமல் இருந்தவர் இன்று (17.11.2024) தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்திற்கு வருவதாக செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் கருங்குளம் பகுதியில் வாகன தணிக்கை ஈடுபட்டபோது, திருநெல்வேலி to திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பேச்சிமுத்து (எ) பாயாசம் காரில் வந்துள்ளார். 

அப்பொழுது மேற்படி போலீசார் காரை நிறுத்த முற்பட்டபோது காரை நிறுத்தாமல் வேகமாக அப்பகுதியில் இருந்த ஒரு திருமண மண்டபத்திற்குள் நுழைந்த எதிரியை பிடிக்க முயன்றபோது போலீசாரிடம் தகராறு செய்து அவதூறான வார்த்தைகளால் பேசி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தவரை உடனடியாக கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad