நவ. 18.தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி களில் 4 வது திவ்யதேசமான தொலைவில்லி மங்கலம் சுவாமி அரவிந்தலோச்சனர் கோவிலில் பிரம்மோற்சவ த்தை முன்னிட்டு நேற்று கருடசேவை நடந்தது.
ஐப்பசி மாதத்தில் ரேவதி நட்சத்திரத்தில் துவங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். அதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கருடசேவை நடைபெறும். நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 8.30 மணிக்கு மூலவர் திருமஞ்சனம். 9.30 மணிக்கு உற்சவர் செந்தாமரை கண்ணன் தாயார்களுடன்குறட்டிற்கு எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம்.
10.30 மணிக்கு அலங்காரம். 11 மணிக்கு தீபாராதனை. 11.30 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த சாத்துமுறை. 12..30 மணிக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு சாயரட்சை.
சுவாமி செந்தாமரை கண்ணன் மற்றும் இரட்டை திருப்பதி தேவர்பிரான் ஆகிய இருவரும் கருட வாகனத்தில் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்டு 7.15 மணிக்கு கருட வாகனத்தில் காட்சி தந்தார்.
உடன் கருட வாகனம் மாட வீதி சுற்றி வந்து 8 மணிக்கு இறங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆத்தான் கீழத்திருமாளிகை ராமானுஜ ஸ்வாமி. கோவில் நிர்வாகத்தினர்.
அர்ச்சகர்கள் ரகு சுந்தர ராஜன் ஸ்தலத்தார்கள் ஸ்ரீதரன். சந்தானம். ஓய்வு பெற்ற பி. டி. ஓ ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசா அறக்கட்டளை ஆலோசகர் விஜயகுமார். களப் பணியாளர்கள் பாலாஜி பத்மநாபன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment