உடன்குடி - சடையனேரி குளம் பராமரிப்பு பணி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 12 November 2024

உடன்குடி - சடையனேரி குளம் பராமரிப்பு பணி.

தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி மற்றும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி உடன்குடி ஒன்றியம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கல்விளையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சடையனேரி குளம் உடைந்து மெஞ்ஞானபுரம் சுற்றுவட்டார பகுதியில் வெள்ள நீர் புகுந்து கல் விளை பாலம் சேதமடைந்து பெறும் பாதிப்பு ஏற்பட்டது. இதனை அந்தப் பகுதியில் புதிய பாலம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஆண்டு மழை காலம் தொடங்க உள்ள நிலையில் தற்போது அதன் சுற்றி உள்ள வெள்ளநீர் வடிகால் கரையோர பகுதியில் இருந்து மலை வெள்ள நீர் ஊருக்குள் செல்லாதவாறு சீரமைக்கும் பராமரிப்பு பணி உடன்குடி ஒன்றிய குழு பெருந்தலைவர் டிபி. பாலசிங் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதனை உடன்குடி ஒன்றிய குழு பெருந்தலைவர் டிபி. பாலசிங் ஆய்வு மேற்கொண்டு பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்தினார். 

இந்த ஆய்வின் போது செம்மறி குளம் ஊராட்சி மன்ற தலைவர் அகஸ்டா மரிய தங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் மண்டக பொடியான், நோவா அகஸ்டா மரிய தங்கம், பொன் இசக்கி, சின்னத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழர் குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad