கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை முதல்வர் காணொலிக் காட்சியில் திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 13 November 2024

கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை முதல்வர் காணொலிக் காட்சியில் திறந்து வைத்தார்.

செய்துங்கநல்லூரில் ரூ.366.12 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இன்று (12.11.2024), ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் ரூ.366.12 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தைக் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.ஆர்.ஐஸ்வர்யா கருங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரா.கோமதி, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad