குழந்தை களின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கி தமிழ்நாட்டை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக மாற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தமிழக முழுவதும் 76 ஆயிரத்து 7505 ஊட்டச்சத்து குறைபாடு உடைய 6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட உள்ளது.
இதையொட்டி மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் படி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊட்டச்சத்து உணவகம் சார்பில் தாய்மார்களுக்கு உணவுப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் உடன்குடி ஒன்றிய குழு தலைவர் பாலசிங் கலந்துகொண்டு 87 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்ராஹிம், சுப்புலட்சுமி, பர்வதம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் பெட்டகம் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இரண்டாவது கட்டமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா.
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment