உடன்குடி, திருச்செந்தூரில் கனமழை கடற்கரையில் தங்குவதை தவிர்க்க எஸ்பி வேண்டுகோள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 15 November 2024

உடன்குடி, திருச்செந்தூரில் கனமழை கடற்கரையில் தங்குவதை தவிர்க்க எஸ்பி வேண்டுகோள்.

உடன்குடி, திருச்செந்தூரில் கனமழை கடற்கரையில் தங்குவதை தவிர்க்க எஸ்பி வேண்டுகோள்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது . 

 மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரண்டு நாட்கள் தென் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது. 

 திருச்செந்தூர், வீரபாண்டியன் பட்டினம், காயல்பட்டிணம், அமலி நகர், ஆலந்தலை, மணப்பாடு, குலசேகரன்பட்டினம், உடன்குடி, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, காயாமொழி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் நேற்று இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோரம் மழை வெள்ளம் தேங்கியது. இன்று காலையும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் மாணவ மாணவிகள் குடை பிடித்தபடி பள்ளிகளுக்கு சென்றனர். 

பல நாட்களுக்கு பின் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூரில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குலசேகரன் பட்டினத்தில் 50 மீட்டர் மழை பெய்துள்ளது. 

இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 236.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஐப்பசி மாத பௌர்ணமியான இன்று இரவு திருச்செந்தூர் கடற்கரையில் பொதுமக்கள் தங்கி முருகனை தரிசித்து செல்வார்கள். 

ஆனால் தற்போது திருச்செந்தூரில் பரவலாக மழை பெய்வதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்குவதை தவிர்க்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad