ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் மணவாள மாமுனிகள் திரு நட்சத்திரம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 6 November 2024

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் மணவாள மாமுனிகள் திரு நட்சத்திரம்.

 ஸ்ரீவைகுண்டம் நவம்பர். 7 நவதிருப்பதி கோவிலில் முதலாவது ஆன ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் மணவாள மாமுனிகள் திரு நட்சத்திரம் கொண்டாடப்பட்டது. 

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ராமானுஜர் காலத்திற்கு பின்னர் மணவாள மாமுனிகள் வைஷ்ணவத்தை வளர்த்து வந்தார். அவரது திரு நட்சத்திரம் ஐப்பசி மூலம் நேற்று ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் நடப்பதை முன்னிட்டு காலை 7 மணிக்கு விஸ்வரூபம். மணவாள மாமுனிகளுக்கு 8 மணிக்கு திருமஞ்சனம் 8.30 மணிக்கு தீபாராதனம். பின்னர் ஸ்வாமி கள்ளப்பிரான் சன்னதிக்கு எழநதருளப் பண்ணி உபதசரத்னமாலை. திருவாய்மொழி நூற்றந்தாதி பாசுரங்கள் அத்யாபகர்கள் சீனிவாசன். கண்ணன். பார்த்தசாரதி. சீனிவாசதாத்தம். ஆகியோரால் சேவிக்கப்பட்டுசாத்துமுறை நடைபெற்றது. தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ். நாராயணன். வாசு. சீனு. ராமானுஜன். ஸ்தலத்தார்கள் சீனிவாசன் ராஜப்பா வெங்கடாச்சாரி.. தேவராஜன். சீனிவாசன். அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad