கோவில்பட்டியில் பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரில் வசிப்பவர் சாத்தையா மகன் காமாட்சி ராஜன் (60). இவர் நாலாட்டின்புதூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பைக் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காமாட்சி ராஜன் மற்றும் எதிரே வந்த பைக்கை ஓட்டி வந்த நாலாட்டின் புதூரைச் சேர்ந்த சாந்தகுமார் மகன் சரவணகுமார் (25), மற்றும் அவரது பின்னால் அமர்ந்திருந்த பெரியராஜ் மகன் கார்த்திக் செல்வன் (21) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் மூவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் காமாட்சி ராஜன் பரிதாபமாக இறந்தார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment