இதில் பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர் . இந்த பூப்பந்தாட்ட போட்டியில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பொறியியல் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட துணை கலெக்டர் ( பயிற்சி) சத்யா அவர்கள் பதக்கங்களை அணிவித்து வெற்றிக் கோப்பையை வழங்கினார்கள். கல்லூரியின் தாளாளரும் வழக்கறிஞருமான ஜோ. ஜெயக்குமார் ரூபன், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயக்குமார், கல்லூரியின் நிர்வாக அதிகாரி முனைவர் வினோதா, வழக்கறிஞர் ரகு ராமன் ஆகியோர் வெற்றிப் பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் D.ஜோஸ் சுந்தர் - யும் வெகுவாக பாராட்டினர்.
No comments:
Post a Comment