ஃபெங்கல் புயல் எதிரொலி - தூத்துக்குடி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 28 November 2024

ஃபெங்கல் புயல் எதிரொலி - தூத்துக்குடி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை.

ஃபெங்கல் புயல் எதிரொலியாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று இரவு 7.30 மணிக்குள் ஃபெங்கல் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தாழ்வு மண்டலம் நகரும் வேகம் மணிக்கு 13கி மீ-ல் இருந்து 10 கி.மீ-ஆக குறைந்திருக்கிறது. 

புயல் உருவாகிய பின்பு, தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும், மேலும் 75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காற்றுடன் மழை பொழிவை குறிக்கும் வகையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக குரல் செய்தியாளர் சேதுபதி ராஜா

No comments:

Post a Comment

Post Top Ad