தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தின் 350 வது யூபிலி ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை யான இன்று சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்த் தலைமையில் , பொருளாதாரம் செழிக்க வேண்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் முதன்மை குரு பன்னீர்செல்வம், பணகுடி பங்குத்தந்தை இருதயராஜ், மற்றும் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று பொது விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
முன்னதாக வருகை புரிந்த சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தை ரோசாரி மாதா கொம்பிரியர் சபையினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை ஜோதிமணி மற்றும் திருத்தல நிதி குழுவினர் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment